என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » புரட்டாசி வழிபாடு
நீங்கள் தேடியது "புரட்டாசி வழிபாடு"
வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்கா பூஜை, தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிட ரீதியான காரணமும் உண்டு.
வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்கா பூஜை, தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிட ரீதியான காரணமும் உண்டு. நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை ‘கோள்சாரம்’ என்றும் குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.
இவர் புரட்டாசி மாதத்தில் புதன் கன்னி ராசியில் சஞ்சரிப்பார். புதன் கல்வி, கலைகளுக்கு உரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்பு நலன்களைத் தருபவராகவும் இருப்பவர். அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலை மகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.
இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், ‘அட்சர அப்யாசம்’ என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜய தசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்த நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து ‘சாரதா நவராத்திரி’ என்று அக்காலத்தில் அழைத்தனர். (சரஸ்வதிக்கு, சாரதா என்ற பெயரும் உண்டு).
கல்வி மட்டுமல்லாமல் செல்வமும், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம் பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.

திருவேங்கடம் என்றாலே நம் வினை நீங்கிவிடும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்தத் திருமலைக்கு புரட்டாசி பெருவிழா சிறப்பானது. அத்தனை பெருமைகள் கொண்டது புரட்டாசியும், அதில் வரும் பெருமாள் வழிபாடும்.
திருவேங்கடம் என்றாலே நம் வினை நீங்கிவிடும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்தத் திருமலைக்கு புரட்டாசி பெருவிழா சிறப்பானது. அத்தனை பெருமைகள் கொண்டது புரட்டாசியும், அதில் வரும் பெருமாள் வழிபாடும். நமது முன்னோர்கள் மிகச்சிறந்த அறிவாளிகள், ஜோதிடம், கணிதம், வானசாஸ்திரம் எல்லாம் அறிந்த ஞானிகள். சந்திரன் முழு நிலவாகத்தெரியும் பவுர்ணமியில் வரும் நட்சத்திரமே அந்த மாதத்தின் பெயராகவும், கோவில் திருவிழாவாகவும் வைத்தனர். மின் விளக்கில்லாத போது நிலவு ஒளியில் மக்கள் கோவிலில் கூடுவது சிறப்பு.
‘மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
என்றாள் ஆண்டாள் நாச்சியார்.
முழுநிலவை ஒட்டியே திருவிழாக்கள் நடை பெறுகிறது.
புரட்டாசி கன்னிமாதம், சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் கன்னிமாதம். (கன்னியாமாதம்)
இந்த மாதத்தில் ‘பெய் தால் மண் உருகப்பெய்யும், காய்ந்தால் பொன் உருகக் காயும்’ என்பார்கள் அதாவது பகலில் பொன் உரு கும் அளவு வெப்பம், சூடு?இருக்கும். இரவு மண் கரைந்தோடும் அளவு மழை பெய்யும் என்று அர்த்தம்.
‘குறையன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!’ நீ கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி நிலையா கக் கோவிலில் திருமலை யில் நிற்கின்றாய் என்று உணர்ந்து ‘மலை யப்பா, மணிவண்ணா, கோவிந்தா, கோவிந்தா, கோபாலா’ என நெற்றியில் திருமண் (நாமம்) தரித்து பஜனை செய்து, வீடுகளில் பாத்திரத்தில், செம்பில், பிச்சை ஏற்று அதைச் சமைத்து விரதம் முடிப்பவர் பலர்!
இந்த மாதம் ஏன் பெருமாளுக்கு வழிபாடு?
புதன் கிரகத்துக்கு அதிதேவதை திருமால். திருமால் என்ற பெருமாள் வழிபாடு தமிழருக்கு புதிதல்ல. நிலத்தை 5 வகையில் பிரித்த தமிழர் ‘முல்லை-காடும் காடு சார்ந்த இடமும், அதன் கடவுள் திருமால், ஆயனாக- கோபாலனாக வந்த கண்ணன், ‘மாயோன் மேயக்காடுறை உலகம்’ என்றனர். அந்த புதன் உச்சமாயிருப்பது கன்னி ராசியில்தான் புரட்டாசி கன்னி மாதமாதலால் அதில் திருமாலுக்கு வழிபாடு பொருத்தம் தானே! இறைவனைப்பாடி பிச்சை ஏற்று, அதை வாங்கி அந்த அரிசி மாவில் மாவிளக்கு ஏற்றுவோரும் உண்டு!
அரிசிமாவில் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து, ஏலக்காய்ப்பொடி தூவி, அதை குன்றுமலை போல் அமுக்கிப் பிடித்து, உச்சியில் ஒரு பள்ளம் வைத்து நெய் ஊற்றித் திரிபோட்டு நாற்புறமும் சந்தனம், குங்குமம் வைத்து இறை நாமம் பாடி விளக்கை ஏற்றுவது மாவிளக்கு வழிபாடு. அது முடிந்தபின், திரியை சமனப்படுத்தி (அணைத்து) வெற்றிலையில் வைத்துவிட்டு, அந்த மாவிளக்கை பிசைந்து தேங்காய்த் துருவல் கலந்து பிரசாதமாகத் தருவர். அதன் சுவை சத்து அளப்பரியது.
இந்த மாதத்தில் நமது தமிழகத்தில் பெரும்பான்மையான இந்துக்கள் அசைவம் தவிர்த்து விரதம் இருப்பர். சைவச்சாப்பாடு மட்டும் உண்பர். வீடுகளில் ‘நாங்கள் புரட்டாசி மாசக்காரர்கள்’ என்று சொல்லி சைவத்திற்கு மாறுவார்கள். ஏன் என்றால் இந்த மாதத்தில் உணவில் கட்டுப்பாடு உண்டு.
விஞ்ஞான ரீதியான காரணம்
புரட்டாசி மாதத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவு, வெயில் அதிகம். அப்போது, காரம், எண்ணை அதிகமாக உள்ள புலால் உணவு உண்டால், செரிமானம் குறையும், வயிற்று உபாதைகள் அதிகமாகும். அதனால் முன்னோர் இந்த மாதம் சைவ உணவுக்கு மாறி விரதம் மேற்கொண்டிருப்பார்கள் போலும்.
சுக்கிரன் கண் பார்வைக்குரிய கோள், சுக்கிரன் அம்மாதத்தில் கன்னி ராசியில் நீச பலத்தோடு அமர்கிறான். சூரியனோடு இணைந்து அஸ்தமனம் பெறுகிறான். இந்த மாதம் கண் நோய்கள் வரும். ‘மெட்ராஸ் ஐ’ என்ற நோய் செப்டம்பர், அக்டோபரில் அதிகம் தாக்கும். சூரியன், புதன், சுக்கிரன் சேர்ந்து சந்திரனுடைய ஆதிக்கமும் வரும்போது மழை பெய்யும். பகலில் சூடு, இரவில் மழை என்ற பருவ மாற்றத்தைத் தாங்க உணவுக் கட்டுப்பாடு தேவை. ஆகவே இந்த மாதம் பாவத்தை (உயிர்க்கொலையை) ஓரளவு குறைக்கும் புண்ணிய மாதம் தான். உணவு சாத்வீகமானால் உணர்வு சாந்தமாகும்.
சனிக்கிழமை
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களில் கூட்டம் நிறைந்திருக்கும்! அது ஏன் என்றால் புதன், சனி இயல்பாகவே பெருமாளுக்கு உகந்த நாட்கள். புரட்டாசி என்றாலே சனி தான். அது சனி பகவான் அவதரித்த நாள். மலையப்பனான திருவேங்கடவன் தன்னை வெளிப்படுத்திய தினமும் புரட்டாசிச் சனிக்கிழமையே ஆகவே புரட்டாசியில் சனிக்கிழமை வழிபாடு சிறப்பு பெறுகிறது.
துளசி கிருமி நாசினி
வீட்டில் துளசிச்செடி இருந்தால் பூச்சிகள், விஷ ஜந்துகள் வராது. தட்பவெட்ப மாற்றத்தில் இருந்து உடல் நலத்தைக் காப்பது துளசி. துளசி தீர்த்தம், சளி, காய்ச்சல், வயிறு உபாதைகளைப் போக்கும். அதை பக்தி என்ற நோக்கத்தில் பெற்றுப் பருகும் போது நமக்குப் பலன் அதிகம் கிடைக்கும். யானையின் பலம் தும்பிக்கையில், மனிதனின் பலம் நம்பிக்கையில் தானே! ஏகாதசி முழுவதும் துளசி தீர்த்தம் பருகிய பின் விரதம் முடிப்பது இதனால் தான். புரட்டாசி சனிக்கிழமை எல்லாப் பெருமாள் கோவிலிலும் கருட சேவை உண்டு. எங்கள் பூர்வீகம், நெல்லை அருகே உள்ள கருங்குளம். மலை மீது உள்ள இரண்டு மரக்கட்டைகளே வெங்கடாசலபதியின் திருவுரு. அங்கே சனிக்கிழமை கருட சேவை முக்கியம்.
கருடன் யார்?
வைந்தேவன், பெரியதிருவடி, கருடாழ்வார் - பெருமாள் வாகனம். அவர் வினதையின் மகன் ஆவார். கருடன் மீது பெருமாள் உலாவருவது கருட சேவை. இதை தரிசித்தால், மறுபிறவி கிடையாது என்பர். நாகத்திற்கு எதிரி கருடன். சர்ப்பதோஷம் உள்ளவர்கள் கருட சேவை காண்பது நல்லது. கருடன் கடைசி நேரத்தில் திருமாலின் திருத்தோளில் ‘தரிசித்ததால் மோட்சம் பெற்றான். கருடனின் ஆற்றல், பக்தி இவற்றைக் கண்ட திருமால் அந்தக் கருடனை தன் முக்கிய வாகனமாக ஏற்றார். அதனால் கருடன் பெரிய திருவடி என்றானது.
அனுமன் சிறிய திருவடி
‘வாகனமும் கொடியும் ஆனவன்’ என ஆபிதான சிந்தா மணி கூறுகிறது. பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் கருடக் கொடி ஏற்றப்படும். ‘பறவை ஏறும் பரமபுருடா’ என்றார் ஆழ்வார். ‘மேலாய்ப் பறந்து வெயில் காப்பான் வின்னத சிறுவன் என்றார் ஆண்டாள். குடந்தை அருகே நாச்சியார்கோவில் கல் கருடன் பிரசித்தம். இங்கு சாலிக் கிராமத்தால் ஆன கருடனுக்குத் தனி சன்னதி.
இவருக்கு மோதகம் 6 வேளையும் பூஜையின் நிவே தனம். வேறு எங்குமில்லாமல் கல் கருடன் மீது பெருமாள் எழுந் தருள்வது நாச்சியார்கோவிலில் மட்டுமே. முதலில் 4 பேர் வெளியே எழுந்தருளச் செய்வர். வாசலுக்கு வந்ததும் 8 பேர், பின் 16 பேர் என்று கனம் அதிகமாகும். அது எப்படி? ஏன்?. அடியவர்களின் குற்றம், பாவம் இவற்றை அவர் ஏற்றுக் கொள்வதால் கனத்து விடுகிறாராம். என்ன அழகான தத்துவம்! கருடன் மீது பெருமாளை தரிசிப்பது, அதுவும் சனிக்கிழமையில் புரட்டாசிச் சனிக்கிழமையில் தரிசிப்பது நாம் செய்த புண்ணியம்.
திருமலையில்...
திருமலையில் பெருமாளின் பிரம்மோற்சவத்தை பிரம்மனே நடத்துவதாக ஐதீகம். கோவிலின் அருகில் நடத்துவதாக ஐதீகம், கோவிலின் அருகில் கூடிய கூட்டம் தலையா கடல் அலையா என்று சொல்லும்படி பக்தர் கூடி ‘கோவிந்தா கோவிந்தா’ என அதிர வைக்கும் கோஷமிட ஒவ்வொரு நாளும் மலையப்ப சுவாமி, ஒவ்வொரு வாகனத்தில் பவனி வருவார். வைகுண்டம் பூமிக்கு வந்ததோ என மகிழ்வார்கள் பக்தர்கள். பெரிய திருவோணம் என்பது புரட்டாசியில் வரும் திருவோணம். திருமால் ஓணத்தில் அவதரித்தாராம். ஆகவே ‘ஓணத்தான்’ என்பார்கள்.
பித்ருக்களுக்கு
இறைவனுக்கு மட்டுமல்ல, இறந்த மூதாதையரான பித்ருக் களுக்கும் உகந்த மாதம் புரட்டாசி. இறந்தவருக்கு உணவாக எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்வது அவசியம். திதி என்ற சிரார்த்தம் தருவது அவசியம். பவுத்தர் கூட தூய வெள்ளை ஆடை உடுத்தி, வருடத்தில் ஒரு முழுநிலவு நாளில் அல்லது அமாவாசை நாளில் கூடி, மந்திரம் சொல்லி நதிக்ரை, கடற்கரை அல்லது ஏரிக்கரையில் இறந்தோருக்கு திதி தருவது வழக்கம்.
மகாளயபட்சம் புரட்டாசி பவுர்ணமி முதல் நவராத்திரி தொடங்கும் அமாவாசை வரை 15 நாள்கள். அதில் முன்னோர் நமது பிண்டத்தை (உணவை) எதிர்ப்பார்த்துக் காத்திருப்பார்களாம். ஏதாவது ஒரு நாளில் மற்றும் மகாளய அமாவாசையில் முன்னோர் நினைவாக எள்ளும் நீரும் இறைத்தல் அவசியம். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும்.
நவராத்திரி கலைவிழா தொழில் வெற்றிக்கு ஆயுத பூஜை கொலு வைப்பது கலை, தொழில் வளர்ச்சிக்கே. நீர்வாழ் உயிர்களின், பொம்மை, அடுத்து பறவைகள், விலங்குகள், மனிதர், மகான்கள் அவதார புருஷர்கள், தெய்வங்கள், எனப்படிப்படியாக பொம்மைகள் வைப்பது அழகு. அறிவுடைமை! பாடல், ஆடல், பஜனை, விதவிதமான அலங்காரம், விதவிதமான பிரசாதங்கள் செய்தல் இவை நவராத்திரியின் சிறப்புகள்.
9 நாளும் 9 சக்தியை எண்ணி வழிபடுவது நவராத்திரி ஆயக்கலைகள் 64 தரும் கலைமகளுக்கு சரஸ்வதி பூஜை அன்று ஆயுத பூஜை, ராமன் ராவணனை வென்ற திருநாள் விஜயதசமி என்று வடஇந்தியாவில் ராம லீலா என கொண்டாடுவர். நாம் சக்தி அசுரர்களை வென்றநாள் விஜயதசமி என்போம். புரட்டாசியில் ராமாயணம் படிக்கும் வழக்கம் பல இடங்களிலும் இருக்கிறது. குறிப்பாக செட்டிநாட்டில் ஏடுபடித்து ராமர் பட்டாபிஷேகம் செய்வர்.
ஆக, இந்த மாதம் தூய்மையாக பக்தி செய்யும் மாதம். உயிர்க்கொலை, புலைப்புசிப்பு இல்லாத மாதம். பல விரதங்கள், விழாக்கள் நிறைந்த மாதம் கன்னியர் நவராத்திரி விரதம், புரட்டாசிச்சனிக்கிழமை விரதமிருந்தால், ஐப்பசி, கார்த்திகையில் மணம் கை கூடும். சனியின் பாதிப்பு நீங்கும். சர்ப்ப தோஷம் அகலும். நல்ல சிந்தனைகள் வளரும். காக்கும் கடவுள் திருமால் கை தூக்கிவிடுவார். அனுமனும், கருடனும் விரைந்தோடி வந்து பெருமானைத் தரிசிக்க வைப்பார்கள். சக்தி நமக்குச்சக்தி தருவாள். என்ன அன்பர்களே புரட்டாசி வழிபாட்டைத்தொடங்கிவிட்டீர்கள்தானே.
வாழ்க வளமுடன்.

புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான விரதங்கள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சித்தி விநாயக விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதம் இது. பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல்-உள்ள சுத்தியோடு விரதம் இருந்து, பிள்ளையாரை வழிபட, காரிய சித்தி உண்டாகும்.
சஷ்டி - லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்கலங்களையும் அருளும்.
அமுக்தாபரண விரதம்: புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12
முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக் கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க அருள்செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.
ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப் படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.
தூர்வாஷ்டமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.
மஹாலட்சுமி விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.
கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. ஸித்திகளைத் தரும்.
அனந்த விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.
ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்யவேண்டும். இவற்றில் பதினான்கை, வேதியர்களுக்குத் தந்து தாம்பூலம் மற்றும் தட்சிணை அளிக்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும். பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தும் பதினான்கு என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால், தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத ஐஸ்வரியங்கள் வந்து சேரும்.

புரட்டாசி மாதங்களில் பெரும்பாலானவர்கள் அசைவத்தைத் தவிர்த்து விட்டு, சைவ உணவை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். இதற்கு ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சிறிய விளக்கம் சொல்லப்படுகிறது.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்றும், புரட்டாசி மாத சனிக்கிழமை தோறும் பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று வணங்குவதும் நம்மவர்களின் வழக்கம். மேலும் புரட்டாசி மாதங்களில் பெரும்பாலானவர்கள் அசைவத்தைத் தவிர்த்து விட்டு, சைவ உணவை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். இதற்கு ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சிறிய விளக்கம் சொல்லப்படுகிறது. அதனை இங்கே பார்க்கலாம்.
ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில், 6-வது ராசியாக வருவது கன்னி ராசி. சூரியன் ஒவ்வொரு ராசியில் நுழைந்து வெளிவரும் கால அளவே மாதமாக கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் சூரியன் கன்னி ராசிக்குள் சஞ்சரிக்கும் காலம் புரட்டாசி மாதம் ஆகும். கன்னி ராசியின் அதிபதியாக விளங்குபவர் புதன் பகவான். புதன் மகாவிஷ்ணுவின் சொருபம். எனவே தான் புரட்டாசி மாதத்தில், பெருமாளை வழிபடும் வழக்கம் வந்ததாக கூறப்படுகிறது.
புதன் பகவான் சைவத்திற்குரிய கிரகம் என்பதால், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும், அந்த மாதத்தில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து துளசி நீரை பருக வேண்டும் என்று சாஸ்திரம் செல்கிறது.
புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது, பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது. புரட்டாசி மாதம் என்பது புதனின் வீட்டில் சூரியன் இருக்கக்கூடிய காலம். புதன் கிரகம் ஒரு சாத்வீகமான கிரகம். புதனை ‘சவுமியன்’ என்றும் குறிப்பிடுவார்கள். ‘சவுமியன்’ என்பதற்கு ‘சாது, சாத்வீகமானவர்’ என்று பொருள் உண்டு. அதிர்ந்து பேசாமல் இருப்பவர்களையே நாம் ‘சாது’ என்று அழைக்கிறோம்.
புதனுக்குரிய உணவு என்பது உப்பு, காரம் இல்லாத உணவு தான். துவர்ப்பு சுவை அதிகம் உள்ள உணவுகளே புதனுக்குரிய உணவுகளாக இருக்கின்றன. இவரது உணவு வகையில் அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், சைவ உணவுகள் மட்டுமே இவருக்கானது. அதனால்தான் புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுவதாக ஆன்மிக ரீதியிலான விளக்கம் அளிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் நாம் அறிவியல் ரீதியிலான விளக்கத்தையும் இங்கே பார்த்து விடுவோம். புரட்டாசி மாதத்தில் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும். மேலும் பூமியின் இயக்கத்துக்கு தகுந்தபடி நமக்கு செரிமானக் குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்படுவதோடு, கெட்டக் கொழுப்பு உடலில் தங்கிவிடும் காலமும் இது தான். ஆதலால் அசைவ உணவை தவிர்த்து, உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள்.
தமிழ் மாதங்களில் புரட்டாசி என்பது வெயிலும், காற்றும் குறைந்து, மழை காலம் தொடங்கும் மாதம் ஆகும். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. பல மாதங்களாக, வெயிலால் சூடாகி இருந்த பூமி மழைநீரை ஈர்த்து, புரட்டாசி மாதத்தில்தான் வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். இதனால் புரட்டாசி மாதத்தை ‘சூட்டை கிளப்பிவிடும் காலம்’ என்றும் சொல்லலாம்.
இந்த காலமானது, வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி, உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சினையை ஏற்படுத்தும். அதனால் தான், நமது முன்னோர்கள் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கினர்.
அது மட்டுமின்றி சரிவர பெய்யாத மழை, திடீர் வெப்ப மாறுதல் நோய் கிருமிகளை உருவாக்கிவிடும். இந்த நேரத்தில் காய்ச்சல், சளி தொந்தரவு அதிகரிக்கும். அவற்றை கட்டுப்படுத்தும் அருமருந்து தான் துளசி. சளியைக் கட்டுப்படுத்தும் துளசியை பெருமாள் ஆலயங்களில் கொடுப்பார்கள். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். அங்கு துளசியை இலையாகவும், துளசி கலந்த தீர்த்தமாகவும் தருவார்கள். அதை பருகினால் வயிற்று பிரச்சினைகள் நீங்கும்.
சாதாரணமாக சைவ உணவு நமது உடலுக்கு எல்லா வகையிலும் உகந்தது. ஆனால் பலராலும் அனைத்து நேரங்களிலும் சைவத்தை மட்டுமே சாப்பிட முடியாது. அப்படிப்பட்டவர்கள், இதுபோன்ற காலங்களிலாவது அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நல்லது.
கடகம் ராமசாமி

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும்.
ஜாதகரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் (அக்டோபர் முதல் வாரம்) கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.
பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி விரத பூஜை இம்மாதத்தில் நடக்கிறது. அம்பாளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம். தைரியம், செல்வம், கல்வி ஆகியவற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் பிறக்கிறது. இது, தமிழ் மாதங்களில் 6-வது மாதமாகும். இது கன்னி ராசிக்குரிய மாதமாகும். புரட்டாசி மாதம் என்றாலே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் திருவிழாக் கோலம் தான். அதிலும், திருமலையில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்ஸவம், கருடசேவை என திருவிழாக்கள் களைக்கட்டும்.
புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இந்த மாதத்தில் பெருமாளுக்கு மட்டுமன்று அம்பாளுக்கு உகந்த நவராத்திரி, சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரி கௌரி விரதம் எனத் தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து கிடைப்பது மிகுந்த சிறப்பாகும்.
இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.
புரட்டாசியில் கடைப்பிடிக்கும் விரதங்கள்...
ஸித்தி விநாயக விரதம் - இது புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதத்தை உள்ள சுத்தியோடு கடைப்பிடித்தால் காரிய ஸித்தி உண்டாகும்.
துர்வாஷ்டமி விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தை மேற்கொள்ள குடும்பம் செழிக்கும்.
மகாலட்சுமி விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.
அமுக்தாபரண விரதம் - புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை(சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் சந்ததி செழிக்கும்.
ஜேஷ்டா விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதமாகும்.
சஷ்டி-லலிதா விரதம் - புரட்டாவி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அருளும்.
கபிலா சஷ்டி விரதம் - புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகள் கிடைக்கும்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள்தான்.
சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு இன்று பூஜை நடக்கிறது.
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலுக்கும், எதிரே அவுஷதகிரி மலையில் உள்ள ஹயக்கிரீவரை வழிபடுவதற்காகவும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுவை ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் தேவநாதசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நை-பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையொட்டி இன்று தேவநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தேவநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. பின்னர் விஸ்வரூப தரிசனம் நடைபெறும். காலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவார்கள். எனவே கோவில் நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் நேற்று தீவிரமாக நடைபெற்றது. பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவிலின் வெளி பிரகாரத்தில் கழிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் கண்காணிக்கும் வகையில் உயர்கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு மொட்டையடிப்பதற்காக கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜாசரவணகுமார் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இதேபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள், புதுப்பாளையம் ராஜகோபால் சுவாமி, புதுக்குப்பம் கஜேந்திர வரதராஜபெருமாள், பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி, சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம பெருமாள், அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார், விருத்தாசலம் பெரியார் நகர் ராஜகோபால சுவாமி, சாத்துக்குடல் சாலையில் உள்ள வரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜை நடக்கிறது.

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் வெளி பிரகாரத்தில் கழிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டபோது எடுத்த படம்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவார்கள். எனவே கோவில் நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் நேற்று தீவிரமாக நடைபெற்றது. பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவிலின் வெளி பிரகாரத்தில் கழிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் கண்காணிக்கும் வகையில் உயர்கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு மொட்டையடிப்பதற்காக கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜாசரவணகுமார் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இதேபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள், புதுப்பாளையம் ராஜகோபால் சுவாமி, புதுக்குப்பம் கஜேந்திர வரதராஜபெருமாள், பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி, சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம பெருமாள், அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார், விருத்தாசலம் பெரியார் நகர் ராஜகோபால சுவாமி, சாத்துக்குடல் சாலையில் உள்ள வரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜை நடக்கிறது.
×

X